தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2016

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.


நாளை பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சில முக்கிய அறிவிப்புகளை இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று நாளை காலை சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அனேகமாக இந்த வாரம் முழுவதும் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விட்டதால் அனைத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.சட்டசபை கூட்டத்தில் மதுவிலக்கு, அரசுஊழியர் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பதி.மு.க.வும், தே.மு.தி.க.வும் திட்டமிட்டுள்ளன. மது விலக்கை அறிவிக்க இரு கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் வலியுறுத்தக்கூடும்.

அரசு ஊழியர்களை சமரசம் செய்யும் வகையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் நீடிக்குமா என்பது நாளை தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டை பொருத்தே அமையும்.எனவே நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 comments:

  1. TRB ??????????¿?????????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  2. TRB ??????????¿?????????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  3. 2013-TET தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதி கிடைக்குமா?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. டெட் தேர்வு தேர்தலுக்கு முன் அறவிப்பு வர வாய்ப்பு்ல்லதா

    ReplyDelete
  7. டெட் தேர்வு தேர்தலுக்கு முன் அறவிப்பு வர வாய்ப்பு்ல்லதா

    ReplyDelete
  8. Part time teacher full day pannuvangala?

    ReplyDelete
  9. எல்லாவற்றுக்கும் உ..........ஊ.......ஊ........ஊ

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. M.P.C TRB Coaching centre erode ( only for mathematics )
    PG and Polytechnic trb coaching classes starts on march 1st week on words
    Batch 1 : Saturday and Sunday 9.00-5.00
    Batch 2 : Monday to Friday evening 6.00-8.00
    Contact no : 9042071667

    ReplyDelete
  12. lap assistant result pathe solluvankala 8laks per exsam result kaka wit panrom ple result publish panuka entha gov ku puneyama pogum ple ple enka life pa parunka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி