மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2016

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார்

ஆசிரியர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ஆதார் அடையாள அட்டை உள் ளிட்ட இதர பணிகளில் ஈடுபடுத்து வதால் பள்ளிகளில் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.தேர்தல் பணிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இவற்றில் வருடம்தோறும் ஏதாவது ஒரு பணி, ஆசிரியர்களுக்கு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இவை தவிர அவ் வப்போது எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ பயிற்சியும் இருக்கும்.


தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மாலையில் பள்ளி முடிந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அவர் கள் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.அண்மையில் தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி களுக்கு ஒரு மாதத்துக்கு மேலாக விடுமுறை விடப்பட்டது. இதனால், பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொடர் மழை விடுமுறை காரணமாக, பாடங்களை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதால் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள், வாக்குப்பதிவு என அடுத்தடுத்து நிறைய பணிகள் காத்திருக்கின்றன. ஆசிரியர்களை தேர்தல், மக்கள்தொகை கணக் கெடுப்பு என வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் பள்ளிகளில் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.இந்தப் பிரச்சினை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனிடம் கேட்டபோது, “தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணி களில் ஆசிரியர்களை ஈடுபடுத்து வதால் பள்ளிகளில் மாணவர்களின் படிப்பு நிச்சயம் பாதிக்கப்படும். ஆசிரியர்களுக்கு இத்தகைய பணிகள் எல்லாம் மாவட்ட நிர்வாகங்கள் மூலமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இந்தப் பிரச்சி னைக்கு அரசுதான் தீர்வு காண வேண்டும்” என்றார். தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை ஆசிரியர் களுக்கு ஒதுக்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கல்வித் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோ சிப்பது கிடையாது என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறும்போது, “மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சி, வாக்குப்பதிவு பணி, ஆதார் அட்டை, மக்கள்தொகை கணக்கெடுப்பு என ஆண்டுமுழுவதும் ஏதாவது ஒரு பணியில் ஈடுபடுத்தப்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான 14 விதமான நலத்திட்ட உதவிகளையும் ஆசிரி யர்களை செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட இது போன்ற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது.இப்பணிகளை செய்ய நிரந்தர பணியாளர்களை நியமிக் கலாம்.இதனால், புதிய வர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பள்ளி களில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளலாம்” என்றார்.

7 comments:

  1. மதிப்பிற்குரிய தாய் உள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு,

    தமிழக சட்டசபையில் விதி எண் 110 யின் மூலம் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு மூலம் எங்கள் தலை விதியை மாற்றி வாழ்வு அளித்த தங்க தாயே!!!

    மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களின் சார்பாக நான் உங்களிடம் எங்களது கோரிக்கையை உங்கள் பொற்பாதங்களில் முன்வைக்கிறேன்,

    கருணையின் வடிவாக எங்களுக்கு நீங்கள் வழங்கிய மதிப்பெண் தளர்வை நீதிமன்றம் வரை சென்று நிறுத்தி விட்டார்கள், தாங்கள் வழங்கிய மதிப்பெண் தளர்வு மூலம் என்னற்ற சகோதர சகோதரிகள் அரசு பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி, தனியார்ப்பள்ளி என பணி புரியும் மற்றும் பணியை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மதிப்பெண் தளர்வை உறுதி செய்ய ஆவண செய்ய அனைவரின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

    அன்பே உருவான அன்னையே!!! தமிழக மக்களின் நல்வாழ்வை மட்டும் என்றும் நினைக்கும் நீங்கள் தற்சமயம் அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஆவண செய்யும் பட்சத்தில் 2013 தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களையும் கைவிடாது எங்களுக்கும் சேர்த்தே பணி நியமனம் செய்யவேண்டுமாய் தாழ்ந்தப்பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்,

    பாசமிகு தாயே!!!
    நீங்கள் பாசத்துடன் தந்த மதிப்பெண் தளர்வை ஏற்றுக்கொண்டதை தவிர நாங்கள் வேறு எதையும் செய்ய வில்லை என்பதை தாழ்மையுடன் உங்கள் பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்,

    இறைவன் அருளாள் நீங்களும் உங்கள் கழக வேட்பாளர்களும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் (234/234) வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் நீங்கள் நிரந்தர முதல்வராக வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.

    ReplyDelete
  2. 118 மதிப்பெண் Eligible இல்லையாம்
    82 மதிப்பெண் Eligible for working as government Trs. Is it AMMA's kingdom?
    GOD IS KEENLY WATCHING

    ReplyDelete
  3. Judge also calculated
    66 cr less than 66 rupee. One who looted 66 rupee was sent for life imprisonment. One who looted 66 crore is asked to rule. us.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி