கணினி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2016

கணினி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் கணினி பட்டதாரி ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் முத்துசாமி போராட்டத்தைத் தொடக்கி வைத்தார். மாநிலச் செயலர் குமரேசன், துணைத் தலைவர்கள் கார்த்தி, புகழேந்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய கல்விக் கொள்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆரம்பப் பள்ளி முதல் கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி