தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய ரூ.300 கோடி கல்விக் கட்டண பாக்கியை வழங்கினால் மட்டுமே கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிகழாண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்தார்.
கரூரில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ராஜூ தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கே.ஆர்.நந்த குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த 12 ஆண்டுகளாக பாடத் திட்டத்தில் மாற்றம் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின் றனர். எனவே, புதிய பாடத் திட்டத்தை வரவேற்கிறோம்.
40,000 மாணவர்கள் சேர்க்கை
பிற மாநிலங்களில் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு ரூ.20,000, 6 முதல் 9-ம் வகுப்பு வரை ரூ.25,000, 10-ம் வகுப்புக்கு ரூ.30,000, பிளஸ் 2-க்கு ரூ.35,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டண முறையைதமிழகத்திலும் அமல்படுத்தலாம்.கல்விபெறும் உரிமைச் சட்டத் தின்கீழ் தனியார் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி யார் பள்ளிகள் ரூ.300 கோடி செல விட்டுள்ளன. நிகழாண்டு ஆன் லைன் மூலம் 40,000 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்துள்ளனர்.தனியார் பள்ளிகளுக்கு ரூ.300 கோடி கல்விக் கட்டணத்தை அரசு பாக்கி வைத்துள்ளது. அந்தக் கட்டணத்தை வழங்கினால் மட்டுமே நிகழாண்டு தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்போம் என் றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி