புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2017

புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017

அன்பு நிறை ஆசிரியத் தோழமைகளே…


கடந்த இரு ஆண்டுகளாக புதியதலைமுறை குழுமம், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ’புதுமைகள், கிராம சேவை, பழங்குடியினர் மேம்பாடு, பெண் கல்வி, செயலூக்கம், மொழித்திறன் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு, படைப்பாற்றல், சிறப்புக்குழந்தைகள் என 9 பிரிவுகளில் ‘புதிய தலைமுறை ஆசிரியர் விருது’ வழங்கிவருகிறது.


இந்த ஆண்டிற்கான ‘ஆசிரியர் விருது’ குறித்த அறிவிப்பு, இந்த வார புதியதலைமுறை கல்வி இதழில் வெளியாகியுள்ளது. திறமையும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள் மகிழ்வோடு விண்ணப்பிக்கலாம்…

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2017.

முழுவிவரங்கள் இந்தவார கல்வி இதழில்…

(விருதுகள் வழங்கும் விழா, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சென்னையில் பிரமாண்டமாய் நடைபெறும். இந்நிகழ்ச்சி புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஒளிபரப்பாகும்…)

7 comments:

  1. Perya viruthu tamil nata kooru potu vikanga atha poi kelu first

    ReplyDelete
    Replies
    1. Free b.ed/M.ed for sc/st
       Bc/Mbc-40,000/-
      Contact :95668-84132
      Dindigul district

      Delete
  2. Perya viruthu tamil nata kooru potu vikanga atha poi kelu first

    ReplyDelete
  3. அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.
    1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
    2.தனியார் பேருந்துகளில்
    கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
    3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
    4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
    5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
    6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
    7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?.
    8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
    9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரச சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Absolutely u r right mr.Thalapathi

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி