மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை! போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2017

மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை! போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படும் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருகிற 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட நேற்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.சிவக்குமார்,பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண்பதற்கு தயாராக இல்லாத அரசின் நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். வருகிற 22-ந் தேதி திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு

 ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இம்மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.சுப்பிரமணியன்  தெரிவித்தார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன்திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், அதுவரை 20 சதவிகிதஇடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பின் சார்பில் 4 கட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசுஇந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதையடுத்து இம்மாதம் 5-ம் தேதி சென்னையில் மாபெரும்பேரணியை நடத்தினோம். அதற்கும் அரசு செவி மடுக்கவில்லை. எனவே இதன் தொடர்ச்சியாக 3-வது கட்டமாக இம்மாதம் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். இந்த வேலைநிறுத்தத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதுடன் தமிழகம் முழுவதும்  சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். அந்த ஒரு நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரமாட்டார்கள். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. இந்த 3-வது கட்டப் போராட்டத்தையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளோம்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக அஞ்ச மாட்டோம். மாறாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம், மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை' என்றார்.

24 comments:

 1. Pap1 posting 2013 la 1000 posting kuda olunga fill Panala ippo athukuda illa

  ReplyDelete
 2. Pap1 posting 2013 la 1000 posting kuda olunga fill Panala ippo athukuda illa

  ReplyDelete
 3. Replies
  1. sir unmaiya? naanum DSE'ku select aagirukken . call letter eppo varum?

   Delete
  2. Pap1 ku posting poda mattangala

   Delete
 4. Arul sir sorry வெளியில போயிட்டு இப்பதான் வந்தேன்.என்னிடம் திருவண்ணாமலை மாவட்ட Vacant list மட்டும்தான் இருக்கு.

  இது ஒரு Friend whatsapp group ல போட்டது..BRTE TEACHERS கிட்ட கேட்டு பாருங்க எல்லா DISTRICT VACANT கிடைக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. Brte conversion counseling காக மாவட்ட Vacant list கொடுக்க பட்டிருப்பதாக தகவல்.

   Delete
  2. 4200 BRTE TEACHERS மாநிலம் முழுவதும் உள்ளனர்.VACANT LIST BRTE TEACHERS க்கு கண்டிப்பா தெரியும்.ஆனா சொல்லுவாங்கனு DOUBT தான்.TRY பண்ணுங்க. எங்க மாவட்டத்துக்கு எப்படியோ நான் வாங்கிட்டேன்.

   Delete
  3. VEMBAKKAM English GHSS
   VEMBAKKAM English GHSS
   VEMBAKKAM English GHSS
   VEMBAKKAM English GHSS
   VEMBAKKAM English GHS
   CHEYYAR English GHS
   PERNAMALLUR English GBHSS
   VEMBAKKAM English GBHSS
   VEMBAKKAM English GHSS
   ANAKKAVUR English GHSS
   ANAKKAVUR English GHSS
   ANAKKAVUR English GHS
   CHEYYAR English GHS


   English மட்டும் சொல்லியிருக்கேன்

   Doubt இருந்தா Verify sir

   Delete
  4. PG TRB ENGLISH VACANCY THERIYUMA

   Delete
  5. PG TRB ENGLISH VACANCY THERIYUMA

   Delete
  6. பரவாயில்லை Unknown உங்களுக்கு தெரியும் என நினைத்து கேட்டேன் உங்களது பதிவுக்கு மிக்க
   நன்றிகள்

   Delete
 5. PG TRB TAMIL CANDIDATES PLEASE JOINING THIS WHATSAPP GROUP LINK
  5 QUESTIONS PERFECT CLAIME WITH TAMIL TEXT BOOK WITH BIBLIOGRAPHY

  PLEASE JOINING TAMIL CANDIDATES
  CLICK LINK AND JOINED

  SUCCESSFUL CLAIMED THIS LINK
  DON'T MISS

  Follow this link to join my WhatsApp group:


  https://chat.whatsapp.com/2RAewgatJRDHrRj2K6ghfT

  ReplyDelete
 6. where we get conduct certificate for cv plz any one tell college or school

  ReplyDelete
 7. Hi friends pls enter 2017 tet passed candidates in English districtwise.pls share this details.in thiruvallur dt 154 candidates in English.pls enter your district total

  ReplyDelete
 8. Hi 2013 tet passed friends.pls come to raise our voice against govt.we are waiting for 4 years without any hope and happiness Let's join together.we must get our job.pls make strike in all cities soon

  ReplyDelete
 9. 219 english passed candidates in thanjavur district

  ReplyDelete
 10. 219 english passed candidates in thanjavur district

  ReplyDelete
 11. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

  2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
  பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
  போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

  அனைவரும் வாரீர்!

  நாள்: 05:09:2017 செவ்வாய்கிழமை
  நேரம்: காலை 10:30
  இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
  ஈரோடு
  ⚫ போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் கருப்பு சட்டையும் ஆசிரியைகள் கருப்பு சேலையும் அணிந்து வரவும்.

  🔵 கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்கள் போராட்ட களத்தில் அறிவிக்கப்படும்
  நன்றி
  2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
  பெற்றோர் கூட்டமபை்பு.
  மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
  வடிவேல் சுந்தர் 8012776142.
  இளங்கோவன் 8778229465

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி