தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர 41 ஆயிரம் காலியிடம்: அக்.10 வரை விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2017

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர 41 ஆயிரம் காலியிடம்: அக்.10 வரை விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் இன்னும் 41 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இதில் சேர அக்டோபர் 10-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு நுழைவு வகுப்புகளில்(எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு) 25சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை பள்ளி நிர்வாகத்துக்கு அரசு செலுத்திவிடும். அந்தவகையில், மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ்ஏறத்தாழ ஒரு லட்சத்து 12 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. நடப்பு கல்வி ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன்விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி, 2 கட்டங்களாக நடத்தப்பட்ட ஆன்லைன்சேர்க்கை மூலமாக 83 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்னும் 41 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்காக 3-வது கட்ட மாணவர் சேர்க்கைசெப்டம்பர் 11-ம் தேதி தொடங்கியது.

இதற்கு விண்ணப்பிக்க காலக்கெடு அக்டோபர் 10-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சேர நேற்று நிலவரப்படி 11 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்ப சாமி தெரிவித்தார்.ஆன்லைனில் (www.dge.tn.gov.in) விண்ணப்பிக்க 10-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. எனவே, இந்த வாய்ப்பை மாணவர்களின் பெற்றோர் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 comment:

  1. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர்களே!
    நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை மாற்றினால் உங்கள் பணிவாய்ப்பு கேள்விகுறியாகும் என கருதுபவர்களே!
    அரசாணை 71 வெயிட்டேஜ் முறை தொடரவேண்டும் என விரும்புகிறீர்களா?
    உடனே அழையுங்கள்.
    Cell No : 8012776142
    9500959482
    99426 61187
    90472 94417

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி