மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் இங்கிலாந்து அமைச்சர் கலந்துரையாடல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2017

மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் இங்கிலாந்து அமைச்சர் கலந்துரையாடல்

சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சிலின் புதுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மயிலாப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் இங்கிலாந்து அமைச்சர் மார்க் ஃபீல்டு நேற்று கலந்துரையாடினார்.
பள்ளி மாணவர்களிடம் ஆங்கில திறன் மற்றும் வேலைவாய்ப்புச் சார்ந்த திறன்களை மேம்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சில் ‘புதுமைப் பள்ளி’ என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் சென்னையில் உள்ள70 மாநகராட்சி பள்ளிகளில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

சிறப்பு பயிற்சி

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் திட்ட பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். திட்ட பயிற்றுநர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் பாடத் திட்டம் தொடர்பாக சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் ஒரு மாணவர் மன்றத்தை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.இந்நிலையில், இங்கிலாந்து வெளியுறவுத் துறைமற்றும் காமன்வெல்த் அலுவலகத்துக்கான இணை அமைச்சர் மார்க் ஃபீல்டு இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட சென்னை வந்தார்.அவர் மயிலாப்பூர் கே.பி.சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது, பள்ளி மாணவர்கள் புதிர் கண்டறிதல் முறையில் தங்களுடைய ஆங்கில திறனை வெளிப்படுத்தி னர்.இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியாவுக்கான பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் மெய் வெய் பார்க்கர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) ஆர்.லலிதா கலந்துகொண்ட னர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி