ரேஷன் வாங்க கார்டு தேவையில்லை இனி மொபைல் போன் போதும்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2017

ரேஷன் வாங்க கார்டு தேவையில்லை இனி மொபைல் போன் போதும்!!!

ரேஷன் கடைகளில், கார்டுதாரரின் மொபைல் போன் எண் வாயிலாக, அரிசி, பருப்புஉள்ளிட்ட பொருட்களை வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க, ரேஷன் கார்டு கட்டாயம். தற்போது, கார்டு பயன்பாட்டை தவிர்த்து, கார்டுதாரரின் மொபைல் போன் எண் வாயிலாக, ரேஷன் பொருட்களை வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கார்டில், விற்பனை விபரம், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படும். தற்போது, ரேஷன் கடையில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அதன் வழியாக, 'ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த கருவியில், கார்டுதாரரின் மொபைல் போன் எண்ணும் பதிவாகியுள்ளது.இதனால், பொருட்கள் வாங்க, ஸ்மார்ட் கார்டு எடுத்து செல்ல தேவையில்லை. மொபைல் போன் மட்டும் எடுத்து சென்றால் போதும். ஊழியர், அந்த மொபைல் எண்ணை கருவியில் பதிவு செய்ததும், கார்டுதாரரின் மொபைலுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' வரும். அந்த எண்ணை ஊழியரிடம் காட்டினால், அதை பதிவு செய்து, பொருட்கள் தரப்படும். தற்போது, இந்த சேவையை பெறலாம். இதற்கு, கூடுதல் நேரமாகும். எனவே, அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடிந்ததும், மொபைல் எண் வாயிலாக, பொருட்கள் வழங்கும் சேவை அதிகாரபூர்வமாக செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

'ஆதார்' கார்டுக்கு ரேஷன்!

ரேஷன் கடைகளில், கார்டுகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின், 'ஆதார்' விபரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஸ்மார்ட் கார்டு, மொபைல்எண்ணை போல், ஆதார் மட்டும் எடுத்து சென்று, பொருட்கள்வாங்கும் சேவையும், விரைவில் துவக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி