நீங்க EMI கட்டுபவரா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2017

நீங்க EMI கட்டுபவரா?

ஒரு ஹோம் லோன் 10 லட்சம் போட அவ்வளவு பார்மாலிடீஸ், பிராசசிங் பீஸ், செக்யூரிட்டி, சேலரி ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மெண்ட், மாசம் மாசம் EMI இது போக அதுக்கு அதிகமான வட்டி. இது தான் இப்போதைய நடைமுறை.


எங்க ஊர் கிராமங்களில் என்ன செய்வாங்க வீட்ல இருக்க ஒரு குழந்தைக்கு கிடா வெட்டி காது குத்து வைப்பாங்க. சொந்தக்காரனுங்க ஒரு 1000 குடும்பம் இருந்தா போதும்.

நாம/நம்ம முன்னோர்கள் செஞ்சத 1000 குடும்பங்கள் 500, 1000, 2000 ரூபாய் திரும்ப மொய் வைப்பாங்க. 10 லட்சம் ஈசியா வந்துரும். அந்த காசை வச்சு புது வீடு கட்ட ஆரமிப்பாங்க.

இந்த மொய் பணத்துக்கு உறவு மட்டும் தான் செக்யூரிட்டி. சாப்பாடு, பந்தல், தோடு செலவு தான் பிராசசிங் பீஸ். குழந்தையோட காது தான் பாண்ட் பேப்பர். மொய் நோட்டு தான் EMI சார்ட்.

இந்த தொகைய மாசம் மாசம் EMI கட்டணும்ன்னு இல்ல. அவரவர் வீட்டில் விசேசம் வரும்போது அவர் செஞ்சத கட்டுனா போதும். அதிகம் சேர்த்து கட்டுனா நாளைக்கு நம்ம பேத்திக்கு காது குத்து வச்சு, நம்ம பையன் வீடு கட்ட உதவும்.

பேங்க்ல லோன் வாங்கிட்டு நின்னா நாம கடன்காரன் ஆகுறோம். ஆயிரம் பேர் சேர்ந்து மாறி மாறி உதவும் போது நாம சொந்தக்காரனா ஆகுறோம்.

உங்களிடம் நல்ல சொந்தங்களும், சரியான கண்ணியமும் இருந்தா தமிழர் வாழ்க்கை முறைய விட மிகச்சிறந்த பேங்கிங் சிஸ்டம் உலகத்தில் எங்கும் இல்ல..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி