486 இ-சேவை மையத்தில் வண்ண வாக்காளர் அட்டை:தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2017

486 இ-சேவை மையத்தில் வண்ண வாக்காளர் அட்டை:தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது

தமிழகம் முழுவதும் 486 இ சேவை மையங்களில் ரூ.30 கொடுத்து பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை பெற்றுக்கொள்ளும் திட்டம் செயல்முறைக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் 264 தாலுகாக்களில் 486 இ சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு வருவாய், சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களும், திருமண உதவித்தொகை, பெண் குழந்தை உதவி திட்டம் என்ற இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப்படுகிறது.மேலும் இதன் மூலம் வரி கட்டுவது உள்பட 100 வகையான சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இசேவை மையங்களில் வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம் தேர்தல் துறை வழங்கி உள்ளது. வாக்காளர்கள் இசேவை மையங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் வரிசை எண்ணை கூறியதும் கைக்கு அடக்கமான பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக ₹30ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும் இசேவை மையங்களுக்கு சென்று அடையாள எண்ணை கூறி புதிய அட்டை பெற்றுக்கொள்ளலாம். தற்போது இசேவை மையங்களில் வாக்காளர்களை புகைப்படம் எடுத்து அதை வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன.

மேலும்பழைய வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்தும் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, முன்பு தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்கள் புகைப்படம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலை ஸ்கேன் செய்து சென்னை தேர்தல் துறைக்கு அனுப்பப்பட்டது. இதை மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 5 நிமிடத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அரசு அமல்படுத்தி உள்ளது’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி