சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை ஆயுதப்படை காவலர் மாயழகுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது மாயழகு, போலீஸ் சீருடையிலேயே போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இவர் திடீரென மைக் பிடித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். அப்போது பேசிய அவர், இது ஒரு துவக்கம்தான் என்றும், இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் தமக்கு எந்த பயமும் இல்லை என்றும், காவல்துறையில் இருக்கும் தங்களுக்கும் உணர்வு இருக்கிறது என்றார்.
பின் பேசிய அவர், தமிழர்களுக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு, அது முன்வைத்த காலை பின் வைக்கமாட்டார்கள் என கூறிய போது இளைஞர்களின் சத்தம் விண்னை பிளந்தது. மேலும் இது நியாமான போராட்டம் என்றும் தான் பேசுவதை பல காவலர்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் கூறினார். இவ்வாறு உணர்வுபூர்வமாக அவர் பேசியதன் மூலம் அங்கு இருந்த இளைஞர்களிடையே பலத்த வரவேற்பை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
I support maayalagu sir
ReplyDeleteநேர்மையா, உண்மையா, தனது நியாயமான உணர்வை வெளிப்படுத்திய வருக்கு துறைறீதியாக நடவடிக்கை
Deleteஆனால்,
மேல் மட்ட அதிகாரத்திற்கு அடிபணிந்து, மனசாட்சிக்கு விரோதமாக , ஆட்டோவிற்கும், போலீஸ்டேஷனுக்கும் தீ வைத்தவர்களுக்கு எந்த விதமான விசாரண என்று வெளிப்படையாக தெரிவிக்க முடியாத நிலை.
எப்பொழுதும் உண்மை வெளிச்சத்தில் தலைநிமிர்ந்து நிற்கும், நேர்மையற்றத் தன்மை தலைக் குனிந்து மறைந்து தான் செல்ல வேண்டும்.
இது உலக நீதி .
வாழ்த்துகள் மதியழகு காவலரே, என்றும் நீங்கள் காவலர் தான் உண்மைக்கும், நேர்மைக்கும்.
இன்று வேண்டுமானால்,
எண்ணிக்கையில்
உங்களைப் போன்று, நேர்மையானவர்கள்
அரசுத் துறையில் குறைவானதாக இருக்கலாம், ஆனால் ,
எப்பொழுதும் நேர்மையானவர்களைத் தான்,
நேர்மையானமக்களால் விரும்புவர்கள்.
Brave
ReplyDeleteI support you
ReplyDeleteI support you
ReplyDeleteI support you
ReplyDeleteநேர்மையா, உண்மையா, தனது நியாயமான உணர்வை வெளிப்படுத்திய வருக்கு துறைறீதியாக நடவடிக்கை
ReplyDeleteஆனால்,
மேல் மட்ட அதிகாரத்திற்கு அடிபணிந்து, மனசாட்சிக்கு விரோதமாக , ஆட்டோவிற்கும், போலீஸ்டேஷனுக்கும் தீ வைத்தவர்களுக்கு எந்த விதமான விசாரண என்று வெளிப்படையாக தெரிவிக்க முடியாத நிலை.
எப்பொழுதும் உண்மை வெளிச்சத்தில் தலைநிமிர்ந்து நிற்கும், நேர்மையற்றத் தன்மை தலைக் குனிந்து மறைந்து தான் செல்ல வேண்டும். இது உலக நீதி .
வாழ்த்துகள் மதியழகு காவலரே, என்றும் நீங்கள் காவலர் தான் உண்மைக்கும், நேர்மைக்கும்.
Tamizhanda
ReplyDeleteTamizhanda
ReplyDeleteமிகச்சரியான வரவேற்கத்தக்க நடவடிக்கை
ReplyDelete