Flash News : டிசம்பர் 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2017

Flash News : டிசம்பர் 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர்  21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நவம்பர் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வாக்காளர் பட்டியல் வெளியீடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியுடன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லியில் ஆலோசனை நடத்தியபின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி அறிவிப்பு வெளியிட்ட 26 நாட்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு காலமானதை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இதனையடுத்து ஆர்.கே.நகர் தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்படும்போது அங்குள்ள 256 வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு ஓட்டு பதிவானது என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலான வி.வி.பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

*வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: நவம்பர் 27
*வேட்புமனு தாக்கல் முடிவு     : டிசம்பர் 4 
*வேட்புமனு பரிசீலனை          : டிசம்பர் 5
*வேட்புமனு வாபஸ்                  : டிசம்பர் 7
*வாக்குப்பதிவு                               : டிசம்பர் 21
*வாக்குஎண்ணிக்கை                  : டிசம்பர் 24

12 comments:

  1. பொன்னான வாய்ப்பு!!!!!!!!""

    மறந்து விடாதீர்கள்!!!!!

    மறந்தும் இருந்து விடாதீர்கள்????????

    மக்களே?????????????

    ReplyDelete
    Replies
    1. Electionala Tet posting delay aguma???

      Delete
    2. kanna sir any news for dse selected candidates

      Delete
    3. செவ்வாய்க்கிழமைக்குள் எதிர்பார்க்கலாம் Vijaya madam

      Delete
    4. Tet candidates sabam ungala summa vidathu ,,,, tholvi Admk tholvi....rk nagr makkale sinthuthu vaku aliunga....

      Delete
  2. Posting podara maathiri endha arikurium theriyala. Pg trb 5 months-laye posting pottanga tntet 10 months vandhum posting podala.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Senthil sir yethavathu detail therinja sollunga sir pls

    ReplyDelete
  6. kannan sir dse counselling ena achi

    ReplyDelete
    Replies
    1. avarthaan tuesday kulla varum solraarla . namathu pallikalviyil thaamatham erpaduvathu ondrum thavar illay ?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி