அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜன., 1 முதல் விண்ணப்பம் - kalviseithi

Dec 30, 2017

அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜன., 1 முதல் விண்ணப்பம்

பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கும் பணிகளுக்கு, 2018 ஜன., 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) கட்டுப்பாட்டில் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.புதிய கல்லுாரிகள் துவங்க அங்கீகாரம் பெறுவதும், செயல்பாட்டிலுள்ள கல்லுாரிகள் புதிய பாடப்பிரிவுகள் துவங்கவும், கூடுதல் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆண்டு தோறும், அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம்.
அதன் படி, 2018-19ம் கல்வியாண்டிற்கான அங்கீகாரம் பெறுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. வரும், ஜன., 1 முதல் 31ம் தேதி வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயல்பாட்டிலுள்ள கல்லுாரிகள் மட்டும், அபராதத்துடன் பிப்., 5ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும் பணி, 2018 பிப்., 1ம் தேதி முதல் ஏப்., 10ம் தேதி வரை நடக்கவுள்ளது. மேலும், விபரங்களுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தை www.aicte-india.org பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி