சத்துணவு முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடிமாவட்ட வாரியாக 'டெண்டர்' விட கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2017

சத்துணவு முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடிமாவட்ட வாரியாக 'டெண்டர்' விட கோரிக்கை

முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், 'பழையபடி, மாவட்ட வாரியாக ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
சத்துணவு,முட்டை விலை,நிர்ணயத்தில்,குளறுபடி,மாவட்ட வாரியாக,'டெண்டர்' விட,கோரிக்கை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள, 1,000 பண்ணைகளில், தினமும், 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு எனும், 'நெக்' நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம், வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும்.சத்துணவு திட்டத்துக்காக, தினமும், 70 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதற்காக, திருச்செங்கோட்டைச் சேர்ந்த, 'கிறிஸ்ட்டி' என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது.சத்துணவு திட்டத்துக்கு, 46 முதல், 53 கிராம் எடையுள்ள முட்டையை, 'சப்ளை' செய்ய வேண்டும். ஆனால், 35 முதல், 45 கிராம் எடை உள்ள முட்டையையே வினியோகம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை, அப்போதைய கொள்முதல் விலையை அடிப்படையாக வைத்து, ஒப்பந்தம் போடபடுகிறது. அதே விலைக்கு, ஆண்டு முழுவதும், சப்ளை செய்ய வேண்டும். இதன்படி, ஜூன் மாதம் ஒப்பந்தம் போடப்படுகிறது. இதற்காக, அந்த மாதத்தில் மட்டும், செயற்கை யாகவிலை உயர்த்தப்படுவதாகவும், அதன்மூலம் அரசுக்கு கோடி கணக்கில் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: முட்டை விலையை நிர்ணயம் செய்ய, 21 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், மார்க்கெட் விலையை கருத்தில் கொண்டு, விலை நிர்ணயம் செய்கின்றனர். வட மாநிலங்களில் முட்டை விலை உயரும் போது, தமிழகத்திலும் உயர்த்தப்படுகிறது.

கடந்த, நான்கு ஆண்டு களுக்கு முன், மாவட்ட வாரியாக ஒப்பந்தம் போடப்பட்டு, சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்யப்பட்டது. 2014 முதல், தமிழகம் முழுவதும், ஒருவரே ஒப்பந்தம் பெறும் முறையை அரசுஅறிமுகப்படுத்தியது.இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்தோம். தனி நபருக்கு ஒப்பந்தம் விடுவதை, இப்போதும் நாங்கள் எதிர்க்கிறோம். முன்பு போல், மாதம் ஒரு முறை, மாவட்ட வாரியாக பண்ணை யாளர்கள் ஒப்பந்தம் எடுத்து, முட்டை சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தவறு நடக்காது:

'நெக்' நாமக்கல் மண்டல தலைவர்,செல்வராஜ் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்துக்கு தனி விலை கிடையாது. இந்தியாவில், முட்டை விலை உயரும் போது, உயரும்; குறையும் போது, குறையும். நாமக்கல், ஐதராபாத், ஓஸ்காட்ஆகிய மார்க்கெட்டை கணக்கில் கொண்டு முட்டை கொள்முதல்விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தியாவில், நாமக்கல் மண்டல, 'நெக்' மட்டுமே நன்றாக உள்ளது. தனிப்பட்ட முறை யில் விலையை நிர்ணயம் செய்ய முடியாது. கமிட்டி மூலம் விலை நிர்ணயம் செய்ய படுகிறது. அதுவும், பண்ணையாளர்களுக்கு லாபம் தரும் வகையில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தவறு ஏற்பட வாய்ப்பில்லை இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி