இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் பிப்ரவரி 1ல் ஆய்வு துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2018

இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் பிப்ரவரி 1ல் ஆய்வு துவக்கம்

'இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வு, பிப்., 1ல் துவங்கும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
இன்ஜி., கல்லுாரிகளை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும்.அதேபோல, தொழில்நுட்பம், கட்டடக்கலை, மருந்தியல் மற்றும் மேலாண் படிப்புகள் நடத்தும் கல்லுாரிகளும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெறுவது அவசியம்.

வரும் கல்வி ஆண்டில், அங்கீகாரம் பெறுவதற்கான, 'ஆன்லைன்' பதிவு, இன்று துவங்கி, வரும், 31ல் முடிகிறது. புதிய கல்லுாரிகள் தவிர, தற்போது செயல்படும் கல்லுாரிகளுக்கு, பிப்., 5 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வு பணி, பிப்., 1ல் துவங்கி, ஏப்., 10ல் முடிவடையும் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி