சென்னை மாநகராட்சியில் வேலை: பிப்.2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2018

சென்னை மாநகராட்சியில் வேலை: பிப்.2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையில் மாவட்ட சுகாதார சங்கம் - திருந்திய தேசிய காச நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் சென்னை மாவட்டத்திற்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப்பணியிடங்கள் 11 மாதம் ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்பப்படும்.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: மருத்துவ அலுவலர் - DTC - 02
சம்பளம்: மாதம் ரூ.45,000
தகுதி: எம்.பி.பிஎஸ், CRRI  முடித்திருக்க வேண்டும்.

பணி: மருத்துவ அலுவலர் - மருத்துவக்கல்லூரி
சம்பளம்: மாதம் ரூ.45,000
தகுதி: எம்.பி.பிஎஸ், CRRI  முடித்திருக்க வேண்டும்.

பணி: மருத்துவ அலுவலர் - DR-TB மையம் - 01
சம்பளம்: மாதம் ரூ.45,000
தகுதி: எம்.பி.பிஎஸ், CRRI  முடித்திருக்க வேண்டும்.

பணி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: எம்பிஏ, மேலாண்மை பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மாவட்ட DR-TB/HIV-TB ஒருங்கிணைப்பாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.19,000
தகுதி: இளங்கலை பட்டம், 2 மாத கணினி சான்றிதழ் இரு சக்கர வாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் ஓட்டும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.19,000
தகுதி: பட்ட மேற்படிப்புடன் தொலைத்தொடர்பு, பப்ளிக் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு ஆண்டு பணி அனுவம், இரு சக்கர வாக ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் - 15
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: கலை, அறிவியல் துறையில் இளங்கலை பட்டம், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஓட்டும் திறனும் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: கணினி இயக்குபவர் - 03
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: 10+2 மற்றும் கணினி பட்டயம் அல்லது அதற்கு சமமான அங்கீகரிக்கப்பட்ட கல்வி, DOEACC, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். MS Word Excel and Simple Packages.

பணி: ஆய்வ க தொழில்நுட்ப வல்லுநர் - 03
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: 10+2 மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயம் அல்லது சான்றிதழ் படிப்பை முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: TB சுகாதாரப் பார்வையாளர் - 24
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: இளங்கலை பட்டம் அல்லது 10+2 மற்றும் MPHW-ஆக பணியாற்றிய அனுபவம், ANM, சுகாதாரப்பணியாளர், சான்றிதழ் அல்லது உயர் சுகாதாரப் படிப்பு, காசநோய் பார்வையாளர் சான்றிதழ் படிப்பு, 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி: கணக்காய்வாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம், இரண்டு ஆண்டு இரட்டைப்பதிவு அனுபவம், கணக்கியல் மென்பொருளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆற்றுபடுத்துனர் - DR-TB மையம் - 05
சம்பளம்: 10,000
தகுதி: சமூக பணி, சமூகவியல், உளவியல் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: திட்ட அலுவலர், மாவட்ட காசநோய் மையம், 26 புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600012.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.02.2018
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதும் நிராகரிக்கப்படுவதும் RNTCPயின் அதிகாரத்திற்குட்பட்டது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.chennaicorporation.gov.in/images/RNTCP_TAM.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் பெற http://www.chennaicorporation.gov.in/images/RNTCP_APPL_FORM.pdf என்ற லிங்கை கிளிக் செய்க.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி