வேலூர் நீதிமன்றத்தில் வேலை - kalviseithi

Jan 29, 2018

வேலூர் நீதிமன்றத்தில் வேலை

வேலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3
காலியிடங்கள்: 9
சம்பளம்: மாதம் ரூ.20.600 - 65,500
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தொழில்நுட்ப தகுதி: அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுகலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: கணினி இயக்குபவர் 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியலில் இளங்கலைப் பட்டம் அல்லது பி.ஏ., பி.எஸ்சி, பி.காம் உடன் கணினியில் பட்டயப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தொழில்நுட்பத் தகுதி: அரசு தொழில்நுட்பத் தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: நகல் எடுப்பவர்
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்பத் தகுதி: 6 மாதத்திற்கு மேல் நகல் எடுப்பவராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இரவு காவலர் (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு அல்லது தட்டச்சு செய்து பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒரு பணிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்யப்பட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர் - 632 009

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.02.2018

அனைத்து தகவல் பரிமாற்றங்களும் தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு (ecourts.gov.in/vellore)   and   (ecourts.gov.in/tn/vellore) என்ற இணையத்தில் மட்டுமே தகவல்கள் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் தகவல்கள் அனுப்பப்படமாட்டாது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Vellore%20-%20Recruitment%202018%20-%20Tamil%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி