இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது
மருத்துவர் ராஜகோபால், நாகசாமி, ஞானம்பாள், தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன், விஞ்ஞானி அரவிந்த குப்தா, இயற்கை மருத்துவர் லட்சுமி குட்டி, ஓவியர் பாஜூஷியாம், சமூக ஆர்வலர் சுதான்சு பிஸ்வாஸ், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், தொல்லியல்துறை ஆய்வாளர் நாகசாமி, கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் அளப்பரிய சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி