கல்வி அதிகாரிகள் 32 பேருக்கு, 'ஜீப்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2018

கல்வி அதிகாரிகள் 32 பேருக்கு, 'ஜீப்'

மாவட்டக் கல்வி அலுவலர்களின், கள ஆய்வுப் பணிக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 32 புதிய ஜீப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும், கல்வித் தரத்தை கண்காணிக்கவும், நிர்வாகப் பணிகளை, விரைவாக மேற்கொள்ளவும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில், 32 புதியஜீப்புகள் வாங்கப்பட்டன.அவற்றை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது நுாலகத் துறையில் பணியாற்றி, பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள், 20 பேருக்கு, கருணை அடிப்படையில், பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான பணி நியமன ஆணையை, முதல்வர் பழனிசாமி, நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி