பொதுத் தேர்வுப்பணிகள் புறக்கணிப்பு : இயக்குனருக்கு அமைச்சு பணியாளர்கள் 'நோட்டீஸ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2018

பொதுத் தேர்வுப்பணிகள் புறக்கணிப்பு : இயக்குனருக்கு அமைச்சு பணியாளர்கள் 'நோட்டீஸ்'

அரசு பொதுத் தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனரிடம் அறிவிப்பு (நோட்டீஸ்) கடிதம் வழங்கப்பட்டது.
பதவி உயர்வு, பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபடுத்த கூடாது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பிப்., 7 சென்னையில் இணை இயக்குனரை(பணியாளர் தொகுப்பு) அவரது அலுவலகத்தில் முற்றுகையிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அச்சங்க நிர்வாகிகளை இணை இயக்குனர் குப்புசாமி சென்னைக்கு அழைத்து பேசினார். அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன், பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகானந்தம், பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் துரைப்பாண்டி, பிரசார செயலாளர் அண்ணாமலைராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, 'உதவியாளர், இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வு ஐந்துநாட்களிலும், அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் கண்காணிப்பாளர் பதவி உயர்வும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என இணை இயக்குனர் உறுதியளித்தார். இதனால் முற்றுகை தள்ளிவைக்கப்பட்டது.

தேர்வு புறக்கணிப்பு : இதையடுத்து, 'பொதுத் தேர்வில் கல்வி அமைச்சு பணியாளர்களை பயன்படுத்த கூடாது. இதை கண்டித்து வரும் பொது தேர்வு பணியை புறக்கணிக்கிறோம்,'என இயக்குனர் வசுந்தரா தேவியிடம் கடிதம் அளித்தனர். சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சென்னை, மதுரை, கோவை என தேர்வுத் துறைக்கு ஏழு மண்டல அலுவலகங்களில் ஏராளமான ஊழியர்கள் இருந்தும் பொது தேர்வுத் பணிகளில் ஈடுபடுத்தாமல் கல்வித்துறை அமைச்சு பணியாளர்களை தான்ஈடுபடுத்துகின்றனர். 14 வகை இலவச திட்டங்கள் வழங்குவதே பெரும் சுமையாக உள்ளது. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் வரும் தேர்வு பணிகளை புறக்கணிக்கிறோம், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி