வெளிநாட்டில் படிக்கவும், 'நீட்' தேர்வு எழுதணும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

வெளிநாட்டில் படிக்கவும், 'நீட்' தேர்வு எழுதணும்

மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வு எழுவதுபோல, வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் படிக்கவும், நீட் தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவக் கல்லுாரியில் சேருவதற்காக, 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வு, 2016 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெளிநாடுகளில் மருத்துவம் படிப்போர், நாடு திரும்பி டாக்டராக பணி புரிவதற்கான லைசென்ஸ் பெற வேண்டும்.இதற்காக, எப்.எம்.ஜி.இ., எனப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்ட தேர்வு என்ற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும், 7,000 பேர், மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சீனாமற்றும் ரஷ்யாவுக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர்.ஆனால், இந்த தகுதித் தேர்வை எழுதுவோரில், 15 சதவீதம் பேரே தேர்ச்சி பெறுகின்றனர். தேர்ச்சி பெறாதவர்கள், டாக்டராகப் பணிபுரிவதற்கான லைசென்ஸ் பெறாமலேயே, டாக்டராக பணியாற்றுகின்றனர்.இதை தடுக்கும் வகையில்,நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவம் படிக்க வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய மருத்துவ கமிஷன் மத்திய அரசு விளக்கம்ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளில் உள்ளவர்களும், அலோபதி மருத்துவர்களாக செயல்படுவதற்கான தேர்வு நடத்துவது தொடர்பான தேசிய மருத்துவ கமிஷன் மசோதா குறித்து, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்குமாற்றாக, தேசிய மருத்துவ கமிஷன் கொண்டு வருவதற்கான மசோதாவை பார்லிமென்டில், மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்போர், ஒரு குறிப்பிட்ட தேர்வு எழுதி, அலோபதி டாக்டர்களாக செயல்பட அனுமதிப்பது உள்ளிட்டவை இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பார்லி.,யிலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மசோதா, நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா குறித்த விளக்கங்கள், மத்தியசுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதில், 'டாக்டர்களுக்கான பற்றாக்குறையை குறைக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வு நடத்துவது தொடர்பான குழுவில், அலோபதி டாக்டர்களும் இருப்பர். அதனால், இதில் எந்த பிரச்னையும் ஏற்படாது' என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி