ஏர்செல் சேவை பாதிப்புக்கு என்ன காரணம்? தீர்வு என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2018

ஏர்செல் சேவை பாதிப்புக்கு என்ன காரணம்? தீர்வு என்ன?

ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். கோவையிலுள்ள தலைமை அலுவலக்திதல் நேற்று வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டயது.

சில தினங்களாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும், பல இடங்களில், ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதுதான் இந்த கொந்தளிப்புக்கு காரணம்.

நிதி பிரச்சினை
அந்நிறுவனத்தின், தென் மாநில தலைவர் சங்கரநாராயணன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நாங்கள், குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தின், தொலைத்தொடர்பு கோபுரங்களை பயன்படுத்துகிறோம். இரு தரப்புக்கு இடையே நிதி தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் திடீரென செல்போன் டவர்களை முடிவிட்டனர். இதனால்தான், சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
 
ஒரே நேரத்தில் பலரும் முயற்சி
பீதி காரணமாக வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதியை, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பெற முயற்சித்து வருகிறார்கள். எனவேதான், சர்வர் தாக்குப்பிடிக்க முடியாமல் செயலிழந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏர்செல் நஷ்டம்
2016 ஜூலை மாதத்தில் ரூ.120 கோடி லாபத்தோடு இயங்கிய ஏர்செல், 2017 ஜூலை மாதத்தில், அதாவது ஒரு வருடத்தில், ரூ.5 கோடி மட்டுமே லாபம் ஈட்டும் நிறுவனமாக சரிவை சந்தித்தது. இதுதான் ஏர்செல் நிறுவனம் சந்தித்த மோசமான காலகட்டம். இதன்பிறகு அதிவிரைவாக ஏர்செல் நிறுவனம் சரிவடைந்தது. 2017 டிசம்பரில், 120 கோடி நஷ்டம் என்று அறிவித்து ஏர்செல்.
 
என்ன செய்யலாம்
ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாற, ஏர்செல் பயனாளர்களுக்கு MNP கோட் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணைப் பெறுவதற்கு, PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.
 
ஆதார் அட்டையுடன் போங்கள்
அந்த எண்ணை அருகில் உள்ள மொபைல் கடைகளில் உங்கள் ஆதார் அட்டையுடன் சென்று கொடுத்து, நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி