ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2018

ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

ஜாக்டோ - ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பிப்., 21 முதல், தொடர் மறியல்போராட்டம் நடந்தது.
சென்னையில், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன், தினமும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மறியல் நடத்தினர்.

அவர்களை போலீசார், காலையில் கைது செய்து, மாலையில் விடுவித்து வந்தனர்.நேற்று முன்தினம், பிரதமர் மோடி, சென்னையில் பங்கேற்ற அரசு விழா நடந்த இடம் அருகே, நான்காவது நாளாக போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, முதல்வருடன் பேச்சு நடத்தஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று முன்தினத்துடன் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுமுடிந்தபின், கோடை விடுமுறையில், மே, 8ல், கோட்டையை நோக்கி பேரணி செல்ல, ஜாக்டோ - ஜியோ முடிவு செய்துள்ளது. இதற்காக, மார்ச், 24ல் மாவட்ட வாரியாக, ஆயத்த பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி