5 ஆயிரம் பள்ளிகள் மூடும் அபாயம்: ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2018

5 ஆயிரம் பள்ளிகள் மூடும் அபாயம்: ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 5 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றம்சாட்டினார்.கோவில்பட்டியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில்,
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர்கள் துரைராஜ் மோகன்தாஸ், காசிராஜன், சண்முகத்தாய் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவில்பட்டி வட்டார செயலாளர் குமாரசாமி வரவேற்றார்.அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை, ஆசிரியர்களுக்கு விருதுவழங்கினார்.

மாநில பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மாநில துணை பொதுச் செயலாளர் முனியாண்டி, அரசு ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் அய்யலுசாமி உட்பட திரளான ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதிய ஓய்வூதிய திட்டத்தில் 4 லட்சத்து 75ஆயிரம் பேரிடம் வசூலிக்கப்பட்ட18 ஆயிரம் கோடி ரூபாய், மத்திய தொகுப்பு வாரிய ஆணையத்துக்கு அனுப்பப்படாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டதோடு சரி, அரசு இதுவரை நிலுவைத்தொகை வழங்கவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப சொன்னால், பணியிடங்களை குறைக்க அரசு குழு அமைத்துள்ளது.

 புதிய பாடத்திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால் ஆசிரியர் பணியிடங்களை குறைத்து விட்டு, யாரை வைத்து பாடம் நடத்த முடியும்?.காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளை மூடச் சொல்கின்றன. தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிகள் மூடக்கூடிய அபாயம் உள்ளது. ஆசிரியர் மாறுதலுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது” என்றார் அவர்.

1 comment:

 1. GOVT AIDED SCHOOL VACANCIES FOR PERMANENT

  ENGLISH-BT & PG(Iyar&Bramin only)
  SCIENCE-BT(sc)
  HISTORY-BT&PG (SC )BC-Nadar
  Maths-PG (Hindu only)

  DTED-Priority for SCA and Muslim

  Well efficient skill and experienced candidates or Amount payable candidates only
  Immediately send your resume or contact information to govtaidjob@gmail.com

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி