இஸ்ரோவை பார்வையிடும் வாய்ப்பு!’- கும்பகோணம் பள்ளி மாணவர்கள் 75 பேர் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2018

இஸ்ரோவை பார்வையிடும் வாய்ப்பு!’- கும்பகோணம் பள்ளி மாணவர்கள் 75 பேர் தேர்வு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவை பார்வையிடப்பள்ளி மாணவர்கள் அனைவரையும் அனுமதித்தால் விண்வெளி துறையில் இவர்களுக்கு ஆர்வம் உருவாகும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
உலக அளவில் முதன்மையான இடம் வகிக்கும்விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் இஸ்ரோ ஆறாவது இடம் வகிக்கிறது. பெரும் சவாலான பல செயற்கை கோள்களை விண்ணில் பாய்ச்சி சாதனைகள் படைத்து வருகிறது. இங்கு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 15 ஆயிரத்திற்கும்அதிகமானவர்கள் பணியாற்றுகிறார்கள்.இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற பெரும்பாலான மாணவர்களின் கனவாக உள்ளது.

 இந்நிலையில்தான் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளி பயிலும் 75 மாணவர்களுக்கு இஸ்ரோவை பார்வையிடுவதற்கான அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் 8 முதல் 12-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர்களின் அறிவியல் திறன் சார்ந்த புதுமை படைப்புகளுக்கான கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு இஸ்ரோவை நேரில் பார்வையிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர்கள் ‘’இது மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் இதோடு நின்றுவிடக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் இஸ்ரோவை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதனால் மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சித்துறையில் ஆர்வமும் ஆரம்பநிலை புரிதலும் ஏற்படும், இதனால் இத்துறையில் அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.” என்கிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி