புத்தக வங்கி துவங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2018

புத்தக வங்கி துவங்க உத்தரவு

மாணவர்கள் பயன்படுத்திய பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து, புத்தக வங்கி துவங்கும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டும், பாடப் புத்தகம் அச்சிட, லட்சக்கணக்கான டன் காகிதம் பயன்படுத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் செல்லும் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய வகுப்பில் பயன்படுத்திய பழைய பாட புத்தகங்களை சேகரித்து, தேவைப்படுவோருக்கு வழங்கலாம் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைத்தது.அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், புத்தகவங்கி துவங்க டில்லி அரசு முடிவு செய்தது.

இதுகுறித்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், மாநில கல்வித் துறை அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு பள்ளியும், மாணவர்களிடம் இருந்து, அவர்கள் பயன்படுத்திய பழைய பாடப் புத்தகங்களை சேகரித்து, புத்தக வங்கி துவங்க வேண்டும்.இவ்வாறு சேகரிக்கப்படும், பாடப் புத்தகங்களை, பள்ளி நிர்வாக கமிட்டி மூலம், மிகவும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கலாம்.இவ்வாறு அந்தஉத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி