இன்று வெயில் கொதிக்கும்; சூறைக்காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2018

இன்று வெயில் கொதிக்கும்; சூறைக்காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

'தமிழகத்தில், இன்று(ஏப்.,25) எட்டு மாவட்டங்களில், வெயில் அளவு, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சூறைக்காற்று வீசும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில், வெயிலின் அளவு, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சென்றுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால், கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து, சென்னைவானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, முன் எச்சரிக்கை: கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திருச்சி, சேலம், அரியலுார் ஆகிய எட்டு மாவட்டங்களில், வழக்கமான வெயிலை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். வெப்பநிலையை பொறுத்தவரை, 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும்.

மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்பட, 15க்கும் மேற்பட்ட உள் மாவட்டங்களில், சூறை காற்று வீசும். சில இடங்களில், இடியுடன் கூடிய வெப்ப சலனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி