தாமதமாக தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2018

தாமதமாக தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி


மதுரையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பணி தாமதமாக தொடங்கியது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதியக்குழு பரிந்துரைத்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஆங்கில வழிக் கல்வியை நிறுத்தும் வகையிலான கல்வித் துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ) சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுத் விடைத்தாள்கள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக ஜேக்டோ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் பைபாஸ் சாலை, பொன்னகரம் புட்டுத்தோப்பு, புதூர் சூரியா நகர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விடைத்தாள்கள் பகல் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், மூன்று பள்ளிகளிலும் இந்தப் பணிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமரசம் பேசினர். இதையடுத்து மாலை 3 மணிக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

புதன்கிழமையும் ஆர்ப்பாட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.40 சதவீத ஆசிரியர்கள் புறக்கணிப்பு: விழுப்புரத்தில் விடைத்தாள் திருத்தும் மையத்துக்குவந்த 76 ஆசிரியர்களில் 39 பேர் பணியைப் புறக்கணித்தனர். சின்னசேலத்தில் 110 ஆசிரியர்களில் 40 பேர் பணியைப் புறக்கணித்தனர். திண்டிவனம் மையத்துக்கு நியமிக்கப்பட்ட 80 ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். எனினும், முதல் நாளில் சுமார் 40 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்தப் பணிகள் பாதிப்பின்றி நடைபெற்றதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது: திண்டுக்கல் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையம் முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 25 ஆசிரியைகள், 37 ஆசிரியர்கள் உள்ளிட்ட 62பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி