சென்னையில் போராடிவரும் ஆசிரியர்கள் வேறுஇடத்துக்கு மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2018

சென்னையில் போராடிவரும் ஆசிரியர்கள் வேறுஇடத்துக்கு மாற்றம்!


ச ம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக்கோரி, தமிழக இடைநிலைஆசிரியர்கள் சென்னையில் மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்துவருகிறது.
ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணியிலான ஆசிரியர்களுக்குள் இருக்கும் பெரிய அளவிலான ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராடிவருகின்றனர்.

 கடந்த திங்கட்கிழமை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தைத் தொடங்கினார்கள். அவர்களைக் கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்துவைத்த போலீஸார், பின்னர் அவர்களை விடுவித்தனர். ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று கூறிய ஆசிரியர்கள் திங்கட்கிழமை மதியம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்துசெல்ல மறுத்த ஆசிரியர்களை, நேற்று மாலை வள்ளுவர் கோட்டத்திலுள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு போலீஸார் இடமாற்றம் செய்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் கூறுகையில், "நேற்று காலைகல்வி அதிகாரிகள் எங்களை வந்து சந்தித்தனர். பின்னர்எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரைக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். அக்கூட்டத்தில், எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய 15 நாள் காலஅவகாசம் வேண்டுமென அமைச்சர் கூறியிருக்கிறார். அதனால் எங்கள்கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர முடிவுசெய்தோம். இரண்டு நாளாக கடும் வெயிலில் எங்கள்போராட்டத்தை தொடர்ந்தோம். பல ஆசிரியர்கள் மயங்கமடைந்தனர். எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்துதரவில்லை. இந்நிலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எங்களை வள்ளுவர் கோட்டத்திலுள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்கொண்டுவந்து அடைத்துவைத்துள்ளனர்.

மூன்றாவது நாளாக சுமார் ஆறாயிரம் ஆசிரியர்களுடன் எங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கிறது. இங்கும் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தவிக்கிறோம். மயக்க நிலையிலும் எங்கள் நியாயமான கோரிக்கைக்காக போராடிவருகிறோம். எங்கள் கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி