தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2018

தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

'பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.
அட்டவணை தயார் : சி.பி.எஸ்.இ., பள்ளி களில், 2018 - 19ம் ஆண்டிற்கான வகுப்பு அட்டவணை தயார் செய்யும்போது, அதில், தினசரி ஒரு வகுப்பை, ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்காக ஒதுக்கும்படி, கல்வி ஆணையம், சமீபத்தில் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், இந்த கல்வியாண்டிலிருந்து, 9 -12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினசரி ஒரு மணி நேரம், உடற்கல்வி கட்டாயமாக்கப்பட உள்ளது.இதன்படி, மாணவர்கள், மைதானத்திற்குச் சென்று, தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில், ஒரு மணி நேரம் ஈடுபட வேண்டும். இணையதளம் : இந்த ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்கு, தனியாக மதிப்பெண்கள் உண்டு. இந்த மதிப்பெண்களை, ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும், சி.பி.எஸ்.இ.,யின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.மேலும், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு களில் பங்கேற்கும் தகுதியை பெற, இதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இறுதி மதிப்பெண்களில், இது சேர்த்துக் கொள்ளப்படாது.

'இதற்காக, தனியாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அவசியமில்லை. 'மற்ற வகுப்பு ஆசிரியரின் உதவியுடனேயே, இந்த வகுப்புகளை நடத்தலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, 150 பக்கங்களில், புதிய வழிகாட்டுதல் புத்தகத்தையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி