'டான்செட்' தேர்வு தேதி மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2018

'டான்செட்' தேர்வு தேதி மாற்றம்

அண்ணா பல்கலை அறிவித்த, 'டான்செட்' நுழைவு தேர்வு தேதி, மாற்றப்பட்டு உள்ளது.பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., பட்டப்படிப்பு முடித்தவர்கள், முதுநிலை இன்ஜினியரிங் மற்றும், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், டான்செட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான, டான்செட் நுழைவு தேர்வு, மே, 20ல் நடத்தப்படும் என, அறிவிக்கப் பட்டிருந்தது.அதே நாளில், அரசுத்துறையில், உதவி இன்ஜினியர் பணியில் காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இன்ஜினியரிங் பட்டதாரிகள், போட்டி தேர்வை எழுதுவதா, மேல் படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுவதா என, குழப்பம் அடைந்தனர்.இது குறித்து, நமது நாளிதழில்,ஒரு வாரத்திற்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, டான்செட் தேர்வு தேதியை மாற்றும்படி, தமிழக உயர்கல்வித்துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., கடிதம் அனுப்பியது.

இதை தொடர்ந்து, டான்செட் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை டான்செட் தேர்வு கமிட்டி செயலர், நாகராஜன் நேற்று அறிவித்தார்.புதிய அறிவிப்பின்படி, அண்ணா பல்கலையின்டான்செட் தேர்வு, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் மற்றும், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு, மே, 19ல் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.சி.ஏ., படிப்புக்கு, மே, 20ல் தேர்வு நடத்தப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி