பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2018

பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் தோறும் முதன்மைகல்வி அலுவலர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு பள்ளிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த அடிப்படையில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத அரசு, தனியார், மழலையர் பள்ளி, சி.பி.எஸ்.இ. , ஐ.சி.எஸ்.இ. பள்ளியிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் சொந்த நிலம், போதுமான ஆசிரியர்கள், தீத்தடுப்பு சாதனங்கள் போன்றவை இருக்க வேண்டும். இவற்றை பின்பற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் நலன் கருதி 10-ம் மற்றும் 12-ம் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

8 comments:

  1. அறிக்கை விபரம்:

    கடந்த அதிமுக ஆட்சியில் 2013 ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் தமிழக அரசு ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 94,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கபட்டுள்ளது.மேலும் இச்சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அப்படி இருக்கும் நிலையில் இன்னும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதை சமத்துவ மக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என பள்ளிகல்விதுறை செயலருக்கும், ஆசிரியர்தேர்வுவாரியத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது. எனவே பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து நடப்பு காலிப்பணியிடங்களை அவர்களை கொண்டு நிரப்பி பணியாணை வழங்கிட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி வழங்குகிறேன், ஒரு மாதத்தில் பணி வழங்குகிறேன் என வெற்றறிக்கைதராமல், வேலையை தந்திட நடவடிக்ககைளை மேற் கொள்ளவேண்டும். நான்காண்டுகளாக போராட்டங்களை நடத்தி வரும் 2013 ஆசிரியர்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீரை துடைத்து முதல்வர் தனிகவனம் செலுத்தி, அவர்களுக்கு பணியாணை வழங்கிட வேண்டும்.

    திரு. சரத்குமார்
    தலைவர்
    சமத்துவ மக்கள் கட்சி

    ReplyDelete
    Replies
    1. Dei tamil arivu keta koomatai payale unaku posting intha jenmathula kidaikathuda

      Delete
    2. 13000 potangala da athulaye pogatha ne inuma poga pora

      Delete
    3. Un saabam onum onnum pannathudaa . Muthala Un per potu comment pannuda . Cm ku kodutha request letter laiye thappaana per thapaane reg number potu manu kodukiriinga.
      Nee ellaam teacher aana pasangalukku poisolla .mathavangala emaatha kathu kodupiyaa. Hello2017 poraali muthala poraali enra pera maathu . Nee vachirunthaa antha vaarthaike asingam .
      Unaku vera per athai vachika

      Delete
  2. சூப்பர்...அனைத்து பள்ளிகளையும் மூடிவிட்டு
    அதிகமாக தனியார் பள்ளிகளை திறந்து
    வைப்பார் கல்வி அமைச்சர்...😠😠😠😠

    ReplyDelete
  3. 💥💥2013 TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் -சமத்துவ மக்கள் கச்சி தலைவர் சரத்குமார் அறிக்கை 

    https://www.kalvikural.com/2018/04/2013-tet.html?m=1

    ReplyDelete
  4. சிறிதும் கட்டமைப்பு வசதியில்லாமல் தரம் உயர்த்தப்பட்ட விழுப்புரம் மாவட்டம்,உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி கிராம மேல்நிலைப்பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டமைப்பு வசதி செய்து கொடுப்பது அல்லது மாணவர்கள் நலன் கருதி வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

    ReplyDelete
  5. Namma minister life long avarthan minister think pannitu irukkar may 7 mla"s disqualification judgement

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி