கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விடுத்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து போராட்ட குழுவின் சார்பில் பதிலறிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2018

கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விடுத்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து போராட்ட குழுவின் சார்பில் பதிலறிக்கை!!!

நேற்று மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.நாங்களும் எங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் கண்டிப்பாக உண்ணாவிரத போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று விடுவோம்..நாங்களும் தயாராக தான் உள்ளோம்..நேற்று விடுத்த அறிக்கையில் பிறருடைய தூண்டுதலின் பேரில் இப்போராட்டம் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்..அதனை முற்றிலும் மறுக்கிறோம்..ஏனெனில் இந்த போராட்டம் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது..அனைத்து ஆட்சிகளிலும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது..ஆகவே ஆசிரியர் நலனை மட்டுமே கருதி மட்டுமே போராட்டம் நடைபெற்று வருகிறது...யாருடைய ஆட்சி வந்தாலும் எங்களது போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும்..மேலும் வழக்கு நிலுவையிலுள் உள்ளது என்று கூறியுள்ளார்கள்..வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது வெளியில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு விட்டால் எங்களது வழக்கை வாபஸ் பெற்று விடுவோம்..ஆகவேஎங்களது போராட்டத்தை நியாயத்தை உணர்ந்து அதை திசை திருப்பாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஆவணம் செய்ய வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி