பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் ஜூன் 4ம் தேதி வினியோகம் - kalviseithi

May 31, 2018

பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் ஜூன் 4ம் தேதி வினியோகம்

பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 4ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
மதிப்பெண் பட்டியல்: பிளஸ் 1 தேர்வு எழுதியோருக்கு இணைய தளம் மூலமாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசுத்தேர்வுத்  துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.
ஜூன் 4ம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in  இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே செல்லும்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல்: பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம்: விடைத்தாள் நகல் பெறுவதற்காக பகுதி 1 மொழிப்பாடத்துக்கு 550, மொழிப் பாடம் 2 (ஆங்கிலம்), 550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 275கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடங்கள் தலா 305, மற்ற பாடங்களுக்கு தலா 205 செலுத்த வேண்டும். கட்டணங்கள் அந்தந்த பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும்.

சிறப்பு துணைத் தேர்வு:  பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி தனியாக அறிவிக்கப்படும். பிளஸ் 1 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண்களுடன் சேர்த்து அடுத்த ஆண்டு தேர்வு முடிவில் கணக்கிடப்படும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது நடக்க உள்ள சிறப்பு துணைத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம். அல்லது பிளஸ் 2 தேர்வின் போதும் எழுத வாய்ப்பு வழங்கப்படும். 

2 comments:

 1. நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.

  30/05/2018 நேற்றையதினம் தமிழக சட்டசபையில் பள்ளிகல்விமானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சியின்போது நடத்தபெற்ற 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று ஐந்தாண்டுகளாக பணி வாய்ப்பை இழந்து தவிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்களின் தொடர்கோரிக்கையை ஏற்று *Rule-55*ன்படி சட்டசபையில் சபாநாயகரிடம் அழுத்தம் கொடுத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளரும்,R. K நகர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாண்புமிகு *TTV.தினகரன்* எங்கள் கூட்டமைப்பின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
  இன்றையதினம் 31/05/2018 சட்டசபை கேள்வி நேரத்தில் 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்காக குரல் கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

  இவண்
  2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

  8778229465
  8012776142

  ReplyDelete
 2. எந்த ஆட்சியிலும் இதற்கு ஓர் முடிவு கிடையாது ,கிடைக்காது தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை முழுவதும் நீக்குதல் ஒன்றே தீர்வாக அமையும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி