தமிழக பாடத்திட்டத்தில், பள்ளி இறுதி தேர்வும், பொது தேர்வுகளும், ஏப்., 20ல்முடிந்தன. ஏப்., 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்று வரை, 41 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.
சென்ற ஆண்டில், முந்தைய வகுப்புகளில் இருந்த மாணவர்கள், நாளை அடுத்த வகுப்புக்கு, தேர்ச்சி பட்டியலின்படி மாற்றப்பட உள்ளனர்.முதல் நாளான நாளை, அரசின், 14 வகை நலத்திட்டங்களில், பாட புத்தகம், நோட்டு புத்தகம், இலவச சீருடை போன்றவை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
பள்ளி திறப்பை பொறுத்தவரை, நாளை மறுநாள் சனிக்கிழமை என்பதால், பல தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி திறப்பை, ஜூன், 4க்கு தள்ளி வைத்துள்ளன. இந்த பள்ளிகள், முதலாவதாக வரும் சனிக்கிழமையில், கூடுதலாக ஒரு நாள் பணியாற்றி ஈடு செய்ய முடிவு செய்துள்ளன.
நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.
ReplyDelete30/05/2018 நேற்றையதினம் தமிழக சட்டசபையில் பள்ளிகல்விமானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சியின்போது நடத்தபெற்ற 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று ஐந்தாண்டுகளாக பணி வாய்ப்பை இழந்து தவிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்களின் தொடர்கோரிக்கையை ஏற்று *Rule-55*ன்படி சட்டசபையில் சபாநாயகரிடம் அழுத்தம் கொடுத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளரும்,R. K நகர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாண்புமிகு *TTV.தினகரன்* எங்கள் கூட்டமைப்பின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இன்றையதினம் 31/05/2018 சட்டசபை கேள்வி நேரத்தில் 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்காக குரல் கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இவண்
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
8778229465
8012776142
நனறி நன்றி நன்றி...மக்கள் செல்வர் அண்ணன் டி டி வி..
ReplyDeleteKuralkutthudane enna nadikapogthu
ReplyDelete