இன்று நடக்கிறது 'நீட்' தேர்வு: தமிழகத்தில் 1.07 லட்சம் பேர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2018

இன்று நடக்கிறது 'நீட்' தேர்வு: தமிழகத்தில் 1.07 லட்சம் பேர் பங்கேற்பு

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, இன்றுநாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தை சேர்ந்த, 1.07 லட்சம் பேர் உள்பட மொத்தம், 13.27 லட்சம் மாணவர், மாணவியர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து, அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 39 பேர் உள்பட, 5,500 பேர், வெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு, தமிழகத்தில் இருந்து, ஒரு லட்சத்து, ஏழாயிரத்து, 480 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 6,444 மாணவியர் உள்பட, 9,752 பேர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்கள். இவர்களுக்காக, தமிழகத்தில், 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில், 49 மையங்களில், 33 ஆயிரத்து, 842 பேர் தேர்வு எழுதுகின்றனர்.கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலுார் ஆகிய நகரங்களிலும், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம்மாவட்டங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த, 5,500 மாணவர், மாணவியர், வெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுத செல்கின்றனர். இவர்களில், 39 பேர், அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்.திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடிமாவட்டங்களில் இருந்து, 5,371 பேர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் தேர்வு மையங்களுக்கு செல்கின்றனர். மற்றவர்கள், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்வு மையங்களை தேர்வு செய்துள்ளனர்.நாடு முழுவதும், 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்களில், 13.27 லட்சம் பேர், நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 7.46 லட்சம் மாணவியர்; ஒருவர் திருநங்கை. வெளிநாட்டினர் ௬௨௧ பேர், வெளிநாடு வாழ் தமிழர்கள் 1,842 பேரும், இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 மணிக்கு தேர்வு முடியும். காலை, 9:30 மணிக்கு மேல், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள், உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மாணவர்கள், ஹால் டிக்கெட், வண்ண புகைப்படத்தை மட்டுமே, தேர்வு மையத்துக்கு எடுத்து வர வேண்டும். தண்ணீர் பாட்டில் உள்பட, வேறு எந்த பொருட்களும் அனுமதியில்லை.முழு கை சட்டை அணிய கூடாது; தலையில் பூ வைக்க கூடாது; ஆபரணங்கள் அணியக் கூடாது; காது வளையம், ஜிமிக்கி, மூக்குத்தி, வாட்ச் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகளால், மாணவ, மாணவியர் கலக்கம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி