நாளை மறுநாள் பிளஸ் 1, 'ரிசல்ட்' - kalviseithi

May 28, 2018

நாளை மறுநாள் பிளஸ் 1, 'ரிசல்ட்'

அரசு தேர்வுத்துறை, ஓராண்டுக்கு முன் அறிவித்தபடி, நாளை மறுநாள், பிளஸ் 1 தேர்வு முடிவுகள்வெளியாகின்றன.தமிழகத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும், பிளஸ் 1 தேர்வின் முடிவுகள், நாளை மறுநாள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு, பள்ளி துவங்கும் நாளிலேயே, பொது தேர்வுகள் நடக்கும் தேதியும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் அறிவிக்கப்பட்டன.அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வின் முடிவுகள், திட்டமிட்டபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு முடிவுகளும், அறிவித்தது போல், 30ம் தேதி வெளியாகின்றன. மாணவர்கள்பதிவு செய்துள்ள, மொபைல் போன் எண்களுக்கு, மதிப்பெண்கள் வரும். ஜூன், 1க்கு பின், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றாலும், பெறாவிட்டாலும் மாணவர்கள், பிளஸ் 2வுக்கு அனுப்பப்படுவர். பிளஸ் 2 படித்தபடியே, பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்ற பாடங்களைமீண்டும் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி