தமிழில் ஆகம பயிற்சி பெற உதவும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டய படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2018

தமிழில் ஆகம பயிற்சி பெற உதவும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டய படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழில் ஆகம பயிற்சி பெற உதவும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டயப் படிப்பில் சேர மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெய்வத்தமிழ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ் ஆகம வழிபாட்டை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் சென்னை தெய்வத்தமிழ் அறக்கட்டளையும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயமும் இணைந்து ‘தமிழ் அருட்சுனைஞர்’ என்ற ஓராண்டு கால பட்டயப் படிப்பை, கடந்த 2011 முதல் நடத்தி வருகின்றன. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இப்படிப்பை முடித்து தமிழ் ஆகமஅந்தணர்களாக பணியாற்றி வருகிறார்கள்.2018-19-ம் ஆண்டுக்கான ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 இப்படிப்பில், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலரும் சேரலாம். விண்ணப்பங்களை www.dheivamurasu.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் 2, 4-ஆம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

முறையாக தமிழ் ஆகமப்படி பயிற்சி பெற்று அர்ச்சகர் தகுதியுடன் தமிழ் வழிபாடு செய்ய இந்த படிப்பு ஓர் அரிய வாய்ப்பாகும். மேலும், விவரங்களுக்கு 94451-03775 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி