தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2018

தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்!

தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பியிருப்பதாகவும், இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பியிருப்பதாக தெரிவித்தார்.

துப்பாக்கி சூட்டையடுத்து நேற்றுமுன்தினம் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் தொடங்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், அதனால் இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து, 4 இடங்களில் ஆவின் நிறுவனம் மூலமாக நேரடியாக பால் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாவட்டத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்புவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி