திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் -ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2018

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் -ஸ்டாலின்


சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் நியாயமானது என்று கூறினார்.மேலும் ஜாக்டோ ஜியோவினர் போராட்டம் அறிவித்தவுடன், அவர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தும் முன்பே தமிழக அரசு அழைத்து பேசியிருக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.  இதனிடையே போராட்டம் நடத்திய ஜாக்டோ- ஜியோவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை காவல்துரையினர் கைது செய்வது பண்பாடற்ற ஜனநாயக விரோத செயல் என்று கூறிய ஸ்டாலின், அரசு ஊழியர்களை பயங்கரவாதிகளைபோல் வலைவீசி தேடி கைது செய்வதா என்றும்  கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

இதையடுத்து தமிழகத்தில் அரசாங்கம் ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை என்றும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார். மேலும் அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குவதை விளம்பரம் செய்து ஜெயக்குமார் இழிவுப்படுத்துகிறார் என்றும் துப்பாக்கி , தடியை காட்டி அரசு ஊழியர்களை வழிக்கு கொண்டு வர முதல்வர் பகல் கனவு காண்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.அரசு ஊழியர்களும்,ஆசிரியர்களும் அரசு நிர்வாகத்தை தாங்கி நிற்கும் தூண்கள் என்பதை உணர மறுக்க கூடாது என்றும் ஸ்டாலின் எடுத்துரைத்தார். 

15 comments:

  1. Poya yo, vaaila edhachum nalla vandhuda pogudhu

    ReplyDelete
  2. Nee aaniye pudunga venaam.. Govt teachers korikkai eshuvaanulum niraivethunga adhukku munnadi govt employees kulainthanga govt schoola thaan padikkanumnu sattam podrenu sollu pakkalam..

    ReplyDelete
  3. Nee onnum seiya vendam. Unakka pilaikalai state board la padikka vai.

    ReplyDelete
  4. En unga teachers salary endha alavukku vaangurathu yar aatchiela DMK la tha na Appurem en Inga vaaila varuthunu solrenga konjam ninachu paarunga namakku eppo salary Romba vanthuchu yar aatchilanu Sollunga

    ReplyDelete
  5. Ade yaru da nee nee Oru masurum pudunga vandam

    ReplyDelete
  6. 2004 cosolidate pay regular panni 2 years salary service all waste by your dmk govt so nee onnum pudunga venam unaku peoples never give chance in future so close your both back and front

    ReplyDelete
  7. Consolidate, part time ippadiye posting pottvittu porattam pannikkitte irukka vaippathu yaar?

    ReplyDelete
  8. I m maths dept my weightage is 76.2 can I get job this time...posting irukka illay reply anyone

    ReplyDelete
  9. SET NET qualified in 2012. When will be the recruitment

    ReplyDelete
  10. எல்லாத்துக்கும் காரணம் திமுக தான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி