அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை உள்ளிட்ட 9 இலவசப் பொருள்களை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் நிறுவனத் தலைவர் பா.வளர்மதி தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகப்பை, காலணி, கிரையான்கள், வண்ண பென்சில் உள்ளிட்ட 9 பொருள்கள் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பொருள்கள் கல்வியாண்டின் இடையிலோ அல்லது இறுதிக் கட்டத்திலோ வழங்கப்பட்டு வந்தன.
இதனால் விலையில்லாப் பொருள்களை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இதைக் கருத்தில் கொண்டு 2018-2019-ஆம் கல்வியாண்டு முதல் விலையில்லாப் பொருள்களைத் தாமதமின்றி வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் நிறுவனத் தலைவர் பா.வளர்மதி கூறியது: விலையில்லாப் பொருள்களை வழங்க ஒப்பந்தப்புள்ளி கோருதல், தொடர்புடைய நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், அவர்கள் தயாரித்த பொருள்களை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்தல் என பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இதற்கான தொடக்கநிலைப் பணிகள் கல்வியாண்டு தொடங்கியதும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இந்தப் பொருள்கள் பள்ளி திறந்த பின்னர் சில மாதங்கள் கழித்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
எனவே 2018- 2019-ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பொருள்களை முன்கூட்டியே வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் கடந்த ஏப். 6-ஆம் தேதியே பொருள்களைக் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் அறிவிக்கப்பட்டது. விண்ணப்பித்த நிறுவனங்களின் விண்ணப்பம் செய்த நிறுவனங்களின் விவரங்கள் மே 7 முதல் மே 10 வரை சரிபார்க்கப்படவுள்ளது.
இந்தப் பணிகள் விரைந்து முடித்து கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அவர்கள் பொருள்களைத் தயார் செய்து ஜூன், ஜூலை மாதத்திற்குள் அளிக்க வேண்டும் என கூறப்படும்.
இதையடுத்து அந்த நிறுவனங்கள் அளித்த பொருள்கள் முறைப்படி பரிசோதனை செய்யப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.
வகுப்புகளும்- பொருள்களும்... 1, 2 வகுப்புகளில் பயிலும் 9.16 லட்சம் மாணவர்களுக்கு கிரையான்கள், 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 72.55 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப்பை, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை 58.09 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 16.16 லட்சம் மாணவர்களுக்கு ஜியோமெட்ரி பாக்ஸ், 3 முதல் 5 வகுப்பு வரை 15.15 லட்சம் மாணவர்களுக்கு வண்ண பென்சில், மலைப் பகுதிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலில் அணிவதற்காக 2.46 லட்சம் சாக்ஸ், 1.22 லட்சம் உல்லன் ஸ்வெட்டர், 1.23 லட்சம் ஆங்கிள் பூட்ஸ், 1.20 லட்சம் ரெயின் கோட் ஆகிய 9 விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி