பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை : வெளிப்படைத்தன்மை உள்ளதாக நீதிமன்றம் கருத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2018

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை : வெளிப்படைத்தன்மை உள்ளதாக நீதிமன்றம் கருத்து

பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை நேரடியாக பூர்த்தி செய்து அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆன்லைன் முறையில் மட்டுமல்லாமல் விண்ணப்பங்களை நேரடியாக பூர்த்தி செய்து அனுப்பவும் அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், வழக்கறிஞர் பொன்பாண்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது விண்ணப்ப கட்டணத்தை  வரைவோலை மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம் அளித்தது.

 மேலும் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பல்வேறு வசதிகளை அண்ணா பல்கலைக் கழகம் செய்துள்ளதால் நேரில் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரித்தனர். மேலும் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 8ம் தேதி தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி