*சன் நியூஸ் விவாத மேடை-ஜாக்டோ ஜியோ* - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2018

*சன் நியூஸ் விவாத மேடை-ஜாக்டோ ஜியோ*

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக போராடவில்லை..CPS ல் உள்ள1800 ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.சுமார் 5000 பேர் பணி ஓய்வு பெற்று உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.அரசு இன்று மாண்புமிகு.பணியாளர் சீர்திருத்த துறை அமைச்சர் அவர்கள் மூலம் நாளிதழ்களில் வெளியிட்ட செய்தி அனைத்தும் தவறானது*


தோழர்.ச.மயில்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

*12 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியிடங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன்.1982 லிருந்து இதுவரை புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவே இல்லை.1982 ல் உள்ள மக்கள் தொகை எவ்வளவு.இப்போது உள்ள மக்கள் எட்டுக்கோடி.1982 லிருந்த அதே அரசு ஊழியர்கள் தான் இப்போது உள்ளனர்.3.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.இன்று தமிழக அரசு நாளிதழ்களில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானது.அரசு இன்று வெளியிட்ட ஊதியம் தொடர்பான தகவல்களை உண்மை என்று நிரூபித்தால் இன்றே போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம்.*

தோழர். ராஜ்குமார்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.

*கூலி வேலைக்கு செல்பவர்களைப் போல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கும் அவர்களைப்போலவே 4000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்ற வரட்டுச்சித்தாந்தம் பேசக்கூடாது.அவர்களும் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதித்தான் வந்துள்ளனர்*

திரு.அராத்து
பத்திரிக்கையாளர்.

*ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 18000 கோடி ரூபாய் எங்கே உள்ளது என்றே தெரியவில்லை.மரணம் அடைந்த பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.*

தோழர். ஶ்ரீதர்
ஓய்வூதியர் சங்கம்.

*_பகிர்வு_*
TNPTF
பவானிசாகர்

6 comments:

 1. Replies
  1. நன்றி! நன்றி! ! நன்றி!

   இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் 24 வது மாநில மாநாட்டில்

   2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 94,000 பேர் ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் . பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோருக்கு
   உடனடியாக பணிநியமனம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்

   என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி
   தீர்மான நகலை எங்களுக்கு அனுப்பிய

   மாநில செயலர் தோழர் திரு.முத்தரசன் அவர்களுக்கும்

   தோழர்.தா பாண்டியன் தேசிய குழு அவர்களுக்கும்

   தோழர். நல்லகண்ணு அவர்களுக்கம்
   நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

   2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.

   Delete
 2. அந்த 2013 பற்றி யாராவது பேசுங்கபா

  ReplyDelete
 3. Superah sonninga......!!!!!arasu paniyalarkalaeee....

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி