தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது : 5000 போலீஸ் குவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2018

தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது : 5000 போலீஸ் குவிப்பு!


ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



தலைமைச் செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான சாலை பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தீவுத்திடலில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோயம்படு பேருந்து நிலையம், சென்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் போராட்டம் நடத்த வந்த ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

கடலூர் வழியாக 14 வாகனங்களில் சென்னை வந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் சென்னையில் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட  நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த ஆண்டு சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. நன்றி! நன்றி! ! நன்றி!

    இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் 24 வது மாநில மாநாட்டில்

    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 94,000 பேர் ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் . பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோருக்கு
    உடனடியாக பணிநியமனம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்

    என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி
    தீர்மான நகலை எங்களுக்கு அனுப்பிய

    மாநில செயலர் தோழர் திரு.முத்தரசன் அவர்களுக்கும்

    தோழர்.தா பாண்டியன் தேசிய குழு அவர்களுக்கும்

    தோழர். நல்லகண்ணு அவர்களுக்கம்
    நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.

    ReplyDelete
  2. நன்றி நன்றி நன்றி ..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி