தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தடுத்து நிறுத்தம் : அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2018

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தடுத்து நிறுத்தம் : அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது


ஊதிய உயர்வு , பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில்  தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களை தடுத்து நிறுத்தி சுமார் 1,460 பேரை கைது செய்யும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

மேலும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களை  போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்  மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால் வாலாஜா சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக சென்னை முழுவதும் 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகலில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக திட்டமிட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் வந்து இறங்கிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி