பாஸ்வேர்டை மாற்ற பயனாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2018

பாஸ்வேர்டை மாற்ற பயனாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் பரிந்துரை


டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றும்படி அந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. 330 மில்லியன் பயனாளர்களை கொண்ட டுவிட்டர் வலைதளத்தில்
ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனாளர்களின் பாஸ்வேர்டுகள் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டுகள் அனைத்தும் டுவிட்டரில் பணி புரியும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது.

தொழில்நட்ப கோளாறுகளை சரிசெய்துவிட்டதாக தெரிவித்துள்ள டுவிட்டர் நிறுவனம், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பயனாளர்களும் உடனடியாக தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள டுவிட்டர் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி