ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையை, பள்ளிக்கல்வி துறைஅமைச்சர், செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து, பேசியதாவது:ஒன்றாம் வகுப்புக்கு, 'க்யூ ஆர்க்' என்ற கோடு மூலம், மொபைல் போனில் இசையோடு கலந்த கல்வியை கற்றுத் தர, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அரசு பள்ளியை தேடி வரும் அளவுக்கு, மாணவர்களின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, சிறந்த கல்வியாளர்கள் மூலம், வெற்றிகரமாக எட்டு மாதத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுஉள்ளது.
மூன்றாண்டுகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தோம். ஆனால்அடுத்தாண்டே, 12 வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.'நீட்' தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான், தமிழக அரசின் கொள்கையாகும். இக்கட்டான சூழ்நிலையிலும், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தினோம்.
இதற்காக பயிற்சி பெற்ற, 3,148 மாணவர்களில், 1,000 மாணவர்கள் மருத்துவராக வருவர். தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
Already erodula 2013 Tet Ku Feb I week postingnu sonnaru antha posting pottaru so next plan arivichurukaru very very good
ReplyDelete