ஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின்படி ஓவர்டைம்' படி ரத்து : மத்திய அரசு அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2018

ஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின்படி ஓவர்டைம்' படி ரத்து : மத்திய அரசு அதிரடி

அரசு ஊழியர்களுக்கு, 'ஓவர் டைம்' எனப்படும், பணி நேரத்தை விட கூடுதலான நேரம்பணியாற்று வோருக்கான, படி வழங்குவதை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில், ஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரை அறிக்கையில், 'ஆப்ரேஷனல் ஸ்டாப் எனப்படும், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தவிர, மற்றவர்களுக்கு, 'ஓவர் டைம்' படிகள் வழங்குவதை நிறுத்தலாம்' என, கூறப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.இந்த பரிந்துரையை, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் ஏற்று, பணி நேரத்துக்கு கூடுதலான நேரத்தில் வேலை செய்வதற்கு வழங்கப்படும் படிகளை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதையடுத்து, எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பணிகளில் ஈடுபடுவோர் உள்ளிட்டஊழியர்கள் பட்டியலை தயாரிக்கும்படி, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி