பணியிட மாற்றம் கேட்ட ஆசிரியையை கைது செய்யுமாறு உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு வலுத்த கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2018

பணியிட மாற்றம் கேட்ட ஆசிரியையை கைது செய்யுமாறு உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு வலுத்த கண்டனம்


பணியிட மாற்றம் கேட்ட ஆசிரியரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற போது உத்தர பகுகுணா என்ற பெண் அவரை அணுகினார்.

தாம் உத்தரகாசியில் ஒரு ஊரக பகுதியில் அரசு பள்ளியில் 25 ஆண்டுகளாக ஆசிரியையாக உள்ளதாகவும், தனது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் தமது பிள்ளைகள் வசிக்கும் டேராடூனுக்கு இடமாற்றம் செய்து தருமாறு கூறிய ஆசிரியையை  முதலமைச்சர் கடிந்து கொண்டதோடு, கைது செய்யவும் உத்தரவிட்டார்.

தமது கோரிக்கைக்கு பதில் அளிகாததற்கு காரணம் கேட்டதற்கு உடனடியாக தன்னை சஸ்பெண்ட் செய்து, கைது செய்யுமாறு போலீசாருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும்  அந்த பெண் அழுதபடியே குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியை உத்தர பகுகுணா ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட வந்த ஆசிரியையை கைது செய்ய உத்தரவிட்டதற்கு உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு அம்மாநில எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி